செப்டம்பர் 13, 2012 அன்று ஆஷா நிகேதனுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி ப்ரூக்லினில் (நியூ யார்க்) நடந்தது. 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆதரவைத் தெரிவித்தனர். செல்ஸி, நாதியா, டானியேல் என்ற இளைஞர்களின் பாடல்களும், நடனங்களும் மனதைக் கவர்ந்தன. இந்தக் கூட்டத்தில் இரண்டு நிர்வாக இயக்குநர்கள், நியூ யார்க் மாகாணத்தின் மனவளர்ச்சி குன்றியோருக்காகப் பணிபுரியும் துணை டெபுடி கமிஷனர், முன்னாள் இணை கமிஷனர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இந்த லாபநோக்கற்ற அமைப்பு இந்தியாவில் மனவளர்ச்சி குன்றியோரின் நலனுக்காகச் செயல்படும் ஐந்து ஆஷா நிகேதன் இல்லங்களுக்கும், 'அன்பாலயா' என்ற சிறப்புப் பள்ளிக்கும் உதவுவதற்காக நிதி திரட்டி அளிக்கிறது. நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு.
நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி: Friends of Asha Nikedhan, P.O. Box 182, Candlewood Isle, New Fairfield Ct. 06812
உஷா வெங்கட்ராகவன், ப்ரூக்லின், நியூ யார்க் |