கச்சேரி: நிஷாந்த் ராஜ்
செப்டம்பர் 22, 2012 அன்று கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசைவட்டத்தின் ஆதரவில், ஆஷ்லேண்டில் (மாசசுசெட்ஸ்) நிஷாந்த் ராஜின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. இவர் குரு உமா சங்கரின் சிஷ்யன். குரு தாரா ஆனந்திடமும் பல வருடங்கள் இசைப் பயிற்சி பெற்றுள்ளார். பைரவி ராக 'விரிபோனி' என்ற வர்ணத்துடன் நிகழ்ச்சியைத் துவக்கி, பிறகு ஹம்சத்வனியில் 'வாதாபி' பாடியது அருமை. விறுவிறுப்பான 'சரசமன' பாடலுக்குப் பிறகு காம்போஜியில் 'மரகதவல்லிம்' கரகோஷத்தைத் தட்டிச் சென்றது. ராகமாலிகையில் 'ஆரபிமானம்', தனஸ்ரீயில் 'தில்லானா' மற்றும் திருப்புகழ் கச்சேரிக்கு நிறைவாக அமைந்தன. வித்யா (வயலின்), வருண் சந்திரமௌலி (மிருதங்கம்) கச்சேரிக்கு மெருகேற்றினார்கள். நிஷாந்தின் வயது பதினாறுதான் என்பது குறிப்பிடத் தக்கது.

தேவி சுந்தரேசன்,
ஆஷ்லேண்ட், மாசசூசட்ஸ்

© TamilOnline.com