ஸ்ரீக்ருபா: விஷன் 501
செப்டம்பர் 23, 2012 அன்று சான் ஹோஸேவிலுள்ள ஸ்ரீக்ருபா நடனப் பள்ளி மாணவியர் 'தி ரேடியன்ஸ்: விஷன் 501' என்ற நடன நிகழ்ச்சியை சங்கரா கண் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக மெக்காஃபி அரங்கில் வழங்கினர். 501 நபர்களுக்குப் பார்வை வழங்கும் நோக்குடன் இந்நிகழ்ச்சி 'விஷன் 20/20 - குணப்படுத்தவல்ல பார்வைக்குறைவு' திட்டத்தின் ஓர் பகுதியாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை வழங்கிய 5 மாணவிகளில், நால்வர் உயர்நிலைப் பள்ளியிலும், ஒருவர் நடுநிலைப் பள்ளியிலும் படிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு விஷால் ரமணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்கு மாணவிகள் நேர்த்தியாக நடனமாடினர். "வந்திருந்தோர் வழங்கிய நன்கொடை இவர்களது முயற்சியின் வெற்றியைக் காட்டுகிறது. இவர்கள் இளைய தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரி" என்றார் சங்கரா ஐ ஃப்வுண்டேஷனின் நிறுவனரும் தலைவருமான முரளி கிருஷ்ணமூர்த்தி. முரளி சிராலா மற்றும் ஆஷா குஹா நிகழ்ச்சியைத் திறம்படத் தொகுத்து வழங்கினர். விஷால் ரமணியின் அழகிய நடன அமைப்பும், வழிநடத்தலும், மாணவியரின் தொண்டுணர்வும் பெரிதும் பாராட்டப் பெற்றன.

மேலும் விவரங்களுக்கு:
www.giftofvision.org
www.shrikrupa.org

செய்திக்குறிப்பிலிருந்து
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com