ஸ்வரமஞ்சரி: ஆண்டுவிழா
அக்டோபர் 6, 2012 அன்று ஸ்வரமஞ்சரி இசைப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா, தௌசண்ட் ஓக்ஸில் (கலிஃபோர்னியா) உள்ள ஹில்க்ரெஸ்ட் சென்டர் கலையரங்கில் நடைபெற்றது. குரு இந்து நாகராஜனின் மாணவர்கள் மும்மூர்த்திகள், சுவாதி திருநாள், பாபநாசம் சிவன், புரந்தரதாசர், பத்ராசல ராமதாஸ், அம்புஜம் கிருஷ்ணா ஆகியோரின் கிருதிகளை சுவரசுத்தமாக அட்சரசுத்தமாக பாடினார்கள். இசை குறித்த ஓவியப் போட்டி ஒன்றும் நடந்தது. வெற்றி பெற்றோருக்குப் பரிசளிப்புடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

நாகராஜன் ஜயராமன்,
தௌசண்ட் ஓக்ஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com