சென்னையில் ஒருநாள்


சென்னையில் ஒருநாள் காலையில் நடக்கும் சம்பவம், நடிகர், டாக்டர், காவல்துறை அதிகாரி, பத்திரிகையாளர் எனப் பலரை மாலையில் ஒன்றிணைக்கிறது. மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்த ஒருவரது உடல் உறுப்புகள் வேறு பல நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் 'டிராஃபிக்.' இதன் ரீ-மேக்தான் சென்னையில் ஒருநாள். பல மலையாள வெற்றிப் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஷகித் காதர் இப்படத்தை இயக்குகிறார். ராதிகா, சரத்குமார், பிரசன்னா, பிரகாஷ்ராஜ், சேரன், ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா, பார்வதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். "துயரத்தின் விளிம்பில் இருக்கும் ஒருவர் எடுக்கும் முடிவு, இன்னொருவர்க்கு வரமாகிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் பரவ இப்படமும் ஒரு காரணமாக அமையும்" என்கிறார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராதிகா.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com