கயவன்


முள்ளை முள்ளால் எடுப்பது போல கயவர்களைக் கயவர்களில் ஒருவனாலேயே கருவறுக்கச் செய்யும் படம் 'கயவன்'. இதில் நாயகனாக மிதுன் குமார் நடிக்க, நாயகியாக டிவிங்கிள் நடிக்கிறார். மற்றுமொரு நாயகியாக நைஸா அறிமுகமாகிறார். இவர்களுடன் ரஞ்சித், சிவா, சைதை குணா, வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். "சமுதா‌யத்‌தி‌ற்‌கா‌கச் செ‌ய்‌யு‌ம் ‌தவறா‌ன செ‌யலும், தர்‌மத்‌தி‌ன் ‌பா‌ர்‌வை‌யி‌ல் ‌சரி‌யா‌னதே" என்று சொல்லவரும் இப்படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி. இசை: ஜெரோம் முருகன்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com