1. நூறு கேள்விகள் கொண்ட தேர்வில் கலந்து கொண்ட ராதா, சிலவற்றிற்குச் சரியாகவும் சிலவற்றிற்குத் தவறாகவும் பதிலளித்தாள். தேர்வு முடிவில் அவள் 70 மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். ஒரு சரியான விடைக்கு ஒரு மதிப்பெண்; தவறான விடைக்கு 2 மதிப்பெண் கழிக்கப்பட்டது என்றால் அவள் எத்தனை கேள்விகளுக்குச் சரியான விடையளித்திருப்பாள்?
2. ஒரு வகுப்பில் இருந்த 30 மாணவர்களின் சராசரி வயது 16. மாணவர்கள் வயதுடன் ஆசிரியரின் வயதையும் சேர்த்தால் சராசரி 17 ஆகிறது. ஆசிரியரின் வயது என்ன?
3. 9, 8, 8, 8, 7, 8, 6 ..... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
4. ஒரு வகுப்பின் 28 மாணவர்கள் A, B, C என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் B-யின் எண்ணிக்கை, Cயைப் போல இரு மடங்கு. Aயின் எண்ணிக்கை Cயில் பாதி என்றால் Cயின் எண்ணிக்கை எவ்வளவு?
5. 2, 7, 14, 23, ?, 47 .... வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?
அரவிந்த்
விடைகள்1)
சரியான விடைகள் = x என்க.
தவறான விடைகள் = y என்க
x + y = 100 ; x - 2y = 70; இரண்டையும் சமன் செய்ய
x + y = 100 (-)
x - 2y = 70
3y = 30
y = 10.
ஒவ்வொரு தவறான கேள்விக்கு இரண்டு மதிப்பெண் வீதம் கழிக்க = 10*2 = 20; 90-20 = 70;
ஆக தவறான விடைகள் = 10; சரியான விடைகள் = 90.
2)
மாணவர்களின் எண்ணிக்கை = 30
மாணவர்களின் மொத்த வயது = 30 * 16 = 480
ஆசிரியர் + மாணவர்களின் மொத்த வயது = 31 * 17 = 527
ஆசிரியரின் வயது = 527 - 480 = 47
3)
வரிசை இரண்டு விதமாக அமைந்துள்ளது. முதல் வரிசை - 9, 8, 7, 6; இரண்டாம் வரிசை 8, 8, 8, 8. ஆக அடுத்து வர வேண்டிய எண் 8.
4)
C = x என்க
B = 2C = 2x
A = C/2 = x/2
A + B + C = 28
x/2 + 2x + x = 28
x/2 + 4x + 2x = 28
x/2 + 6x = 28
7x/2 = 28
7x = 28 * 2 = 56
x = 56/7 = 8
5)
வரிசை 5, 7, 9 என்ற வரிசையில் அமைந்துள்ளது. 2 + 5 = 7; 7 + 7 = 14; 14 + 9 = 23;
வரிசையில் அடுத்து வர வேண்டியது 23 + 11 = 34. ( 34 + 13 = 47) ஆகவே விடுபட்ட எண் = 34.