இருவகை தோசைகள்
சௌசௌ பெசரட்டு

தேவையான பொருட்கள்
சௌசௌ - 1
பச்சைப் பயறு - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 1/2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
சிவப்பு மிளகாய் - 3
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
புதினா (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
வெண்ணெய் - 1/4 கிண்ணம்
எண்ணெய் + நெய் (கலந்தது) - 1/2 கிண்ணம்

செய்முறை
புழுங்கலரசி, பயறு இவற்றைத் தனித்தனியாக ஊற வைக்கவும். நான்கு மணிநேரம் ஊறியதும் களைந்து உப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். பாதி அரைந்ததும், தோல் நீக்கி நறுக்கிய சௌசௌவை அதில் போட்டு, தேங்காய்த் துருவல், புதினா போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும். கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் கலந்து, தோசைக்கல்லில் தோசைபோல ஊற்றவும். நெய் எண்ணெய்க் கலவையை இருபுறமும் ஊற்றி மொறுமொறுப்பாக எடுக்கவும். எடுத்து மேலாக வெண்ணெய் தடவிச் சாப்பிடவும். தேங்காய்ச் சட்னி, வெங்காயம், தக்காளிச் சட்னியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com