அங்கிதா, நிகிதாவின் 'குட்டிக் கடற்கன்னி'
படத்தில் காணப்படும் அங்கிதா வர்மன் மற்றும் நிகிதா வர்மன் (செல்லப் பெயர் 'Double Trouble'!) இருவரும் லேசுப்பட்டவர்களல்லர். ஜனவரி 21, 2006 அன்று சேண்டி ஸ்ப்ரிங்ஸ் நடுநிலைப் பள்ளியில் (ராஸ்வெல், ஜோர்ஜியா) நடந்த 5-வது தொழில்நுட்பக் காட்சியில் 'Animated Graphic Design' பகுதியில் முதல் பரிசை வென்றிருக்கிறார்கள்.

'The Little Mermaid' கதையைத் தமது குரலிலேயே வசனங்களைப் பேசித் தயாரித்த இவர்களது படம் பல நிலைகளிலான 600 போட்டியாளர்களுக்கு நடுவே முதலில் வந்தது. இவர்கள் பங்குகொண்டது 3-4 நிலையில் கற்போருக்கானது. ·பின்ட்லே ஓக்ஸ் தொடக்கப் பள்ளியின் (துலுத், ஜோர்ஜியா) சார்பாக இவர்கள் பங்கேற்றனர்.

தென்றல் இவர்களது திறன் மேலும் மெருகேறிப் பரிசுகளைக் குவிக்க வாழ்த்துகிறது.

செய்தி: லதா வர்மன்

© TamilOnline.com