ஆகஸ்ட் 25, 2012 அன்று ஹரிணி ஷாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் தென் கலிபோர்னியாவின் ரோலிங்ஹில்ஸ் எஸ்டேட்டில் உள்ள நோரிஸ் தியேட்டரில் நடைபெற்றது. ஹரிணி பரத வந்தனத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். தொடர்ந்து அலாரிப்பு மற்றும் சிவபெருமான் புகழ் பேசும் லதாங்கி ராக வர்ணத்திற்கு நடனமாடினார். நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் முதலில் 'படா நட்கட் ஹை க்ருஷ்ண கனையா' என்ற புகழ்பெற்ற ஹிந்திப் பாடலுக்கு ஆடிய அவர், தொடர்ந்து தனஸ்ரீ ராகத் தில்லானாவிற்கு நடனமாடினார். 'குறவஞ்சி' நடனத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஹரிணி, குரு தீபாலி வோராவிடம் 9 வருடங்களாக நாட்டியம் பயின்று வருகிறார். குரு தீபாலி வோரா, லாஸ் ஏஞ்சலஸ் நகரின் நித்யக்ஷேத்ரா நடனப்பள்ளியின் இயக்குனர். மதுரை முரளிதரனிடம் தஞ்சாவூர் பாணி பரதநாட்டியத்தைப் பயின்றுள்ள இவர் 1997ல் இப்பள்ளியைத் தொடங்கினார். அமெரிக்கா வருமுன் குரு முரளிதரனின் ந்ருத்யக்ஷேத்ரா நாட்டியப் பள்ளியில் உதவி ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார்.
செய்திக் குறிப்பிலிருந்து தமிழ்வடிவம்: மீனாட்சி கணபதி |