BATM – கைப்பந்துப் போட்டி
ஆகஸ்ட் 25, 2012 அன்று காலையில் வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றம் ஃப்ரீமான்ட் நகரிலுள்ள எலிசபெத் ஏரிக்கரை மத்தியப் பூங்காவில் கைப்பந்தாட்டப் போட்டி மற்றும் சிற்றுலாவை நடத்தியது. சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியிலிருந்து 32 கைப்பந்தாட்டக் குழுக்கள், Pretty but Nasty, புலிகேசி, Spartans போன்ற வேடிக்கையான பெயர்களோடு வந்து குவிந்தன. இவற்றில் நான்கு மகளிர் அணிகள். இறுதிப்போட்டி மாலையில் நடந்தேறியது.

இதற்கிடையே உணவு, சிற்றுண்டி என்று அமர்க்களப்பட்டது. பரிசு பெற்ற அணிகள்:

பெண்கள் பிரிவு:
Super Six - முதல் பரிசு
Pretty but Nasty - இரண்டாவது பரிசு

ஆண்கள் பிரிவு:
தொடக்க நிலை
Eternal Spikers of Bay Area - முதல் பரிசு;
Super Six - இரண்டாம் பரிசு;

இடைநிலை
Pioneers - முதல் பரிசு
Spartans - இரண்டாம் பரிசு

மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட சிற்றுலாவில் சாக்கு ஓட்டம், எலுமிச்சை விழாமல் ஓடுதல், ஆரஞ்சு உரித்தல், பழம் தின்னல் எனப் பல போட்டிகளோடு கலகலத்தது. நிகழ்வின் ஒளிப்படங்களைக் காண www.bayareatamilmanram.org/eng/home.php

இந்திரா தங்கசாமி

© TamilOnline.com