மிச்சிகன்: பராசக்தி கோவில்
செப்டம்பர் 7, 2012 அன்று பான்டியாக் (மிச்சிகன்) பராசக்தி கோவிலின் ராஜகோபுரத் திருப்பணிக்காக கணபதி ஹோமம், 8ம் தேதி நவக்கிரக ஹோமம், 9ம் தேதி சண்டி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. முன்னர், 4ம் தேதி வெங்கடேஸ்வர உத்சவம் சுதர்சன ஹோமத்தோடு நடத்தப்பட்டது. ஆலய நிறுவனர் டாக்டர் குமார் இவற்றை முன்னின்று நடத்தி வைத்தார்.

சிவா,
பான்டியாக், மிச்சிகன்

© TamilOnline.com