நாட்யா: 'Beats of life, Rhythms of heritage'
சிகாகோ நகரிலுள்ள முன்னோடிக் கலை நிறுவனங்களான நாட்யா நடன நிறுவனமும், இந்திய அமெரிக்க ஹெரிடேஜ் அருங்காட்சியகமும் இணைந்து சிகாகோ பொதுமக்கள் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் நவம்பர் மாதம் முழுவதும் 'Beats of life, Rhythms of heritage' என்ற கருத்தில் ஏழு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

நவம்பர் 4, 2012 அன்று ட்யூஸேபில் ஆப்பிரிக்க-அமெரிக்கர் வரலாற்று அருங்காட்சியகத்தில் நடக்கவிருக்கும் இந்தியாவின் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான ரமா வைத்தியநாதனின் பரதநாட்டியம் இந்தத் தொடர் நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமையும். "இந்திய நாட்டிய நிகழ்ச்சி இதற்கு முன்னர் இந்த அரங்கில் நடத்தப்படவில்லை" என்கிறார் நாட்யாவின் இயக்குனர் ஹேமா ராஜகோபாலன்.

இந்திய அமெரிக்க மையத்தின் துவக்க நிகழ்ச்சிகளாக அனிலா சின்ஹா அறக்கட்டளை வழங்கிய கதக் நடனம், பாலிவுட் ரிதம் நடனம், நாட்யாவின் கலைஞர்கள் வழங்கிய பரத நாட்டியம் ஆகியவை நடத்தப்பட்டன. புகழ்பெற்ற இந்திய பரத நாட்டியக் கலைஞர் பிரியதர்சனி கோவிந்த், புல்லாங்குழல் கலைஞர் ஜி.எஸ். ராஜன் ஆகியோர் இளவேனிற்கால நிகழ்ச்சிகளை வழங்கினர். அந்த நிகழ்ச்சியில் உள்ளூர் இளம் மிருதங்கக் கலைஞர் ஆத்ரேயா நாதன் சிறப்பாக வாசித்தார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்:
கதக், பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிகாகோவின் வெவ்வேறு இடங்களில் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ நடத்தப்படும். பிரசாந்த் ஷா, செல்வி ராவ் வழங்கும் கதக் நடனம் அக்டோபர் 14, ஞாயிறு மாலை 3 மணி ஷாம்பர்க் ப்ரெய்ரி சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ் (201, ஷாம்பர்க் கோர்ட், ஷாம்பர்க், இல்லினாய் 60193) அரங்கில் நடைபெறும்.

நுழைவுக் கட்டணம்: $20; மாணவர்கள்: $10

ரமா வைத்தியநாதன் வழங்கும் பரத நாட்டிய நிகழ்ச்சி நவம்பர் 4, ஞாயிறு மாலை 3 மணிக்கு ட்யூஸேபில் மியூஸியம் (740 ஈஸ்ட், 56வது ப்ளேஸ், சிகாகோ, இல்லினாய் 60637) அரங்கில் நடைபெறும்.

சிறப்பு விருந்தினர் கட்டணம்: $50; பொதுக் கட்டணம்: $20; மாணவர்கள்: $10

நிகழ்ச்சி தொடங்கு முன்னர் ஆப்பிரிக்கப் பூர்வீக குடிகளின் அனுபவங்களையும், சாதனைகளையும் பேணிக் காட்சிப்படுத்தி வரும் இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க வகைசெய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்குச் சீட்டுகள் வாங்க: www.brownpapertickets.com
மேலும் தகவலுக்கு: www.iahmuseum.org; www.natya.com

செய்திக்குறிப்பிலிருந்து

தமிழில்: அலமேலு கிருஷ்ணன்

© TamilOnline.com