NETS குழந்தைகள் தின விழா
நவம்பர் 3, 2012 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் (நெட்ஸ்) குழந்தைகள் தின விழாவை ஃப்ராமிங்ஹாம் கீப் டெக் உயர்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளது. இதில் 6 வயதிலிருந்து 16 வயதுவரை உள்ள குழந்தைகள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சியாகத் திருக்குறள் போட்டிகள் இடம்பெறும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி உண்டு. 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி 3 பிரிவுகளாக (வயது அடிப்படையில்) நடத்தப்படும். முதல் சுற்றில் தேர்வான குழந்தைகளே போட்டியில் பங்கு பெறுவர். நெட்சின் வரலாற்றிலே முதன்முறையாக 'சூப்பர் டான்சர்' போட்டி இந்த ஆண்டு நடைபெறுகிறது. போட்டியில் குழுக்களாகக் குழந்தைகள் பங்கேற்க வேண்டும். வெற்றி பெற்ற குழுவுக்கு 'சூப்பர் டான்சர்' பட்டம் வழங்கப்படும்.

பமிலா,
பாஸ்டன்

© TamilOnline.com