அபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளி விழா
நவம்பர் 3, 2012 அன்று மாலை 5:30 மணிக்கு அபிராமி கலை மன்றம், 'விமலாவின் ஒளி விழா' என்ற புதுமையானதொரு நாடகத்தை சான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டரில் வழங்கவுள்ளனர். 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை வளைகுடாப் பகுதியில் நாடகமாக்கி வழங்கிய பாகீரதி சேஷப்பன் குழுவினர் ஏற்படுத்தியுள்ளது 'அபிராமி கலை மன்றம். பாகீரதி சேஷப்பன் எழுதி இயக்கும் இந்த நாடகத்திற்கு ஸ்ரீதரன் மைனர் இசை அமைக்கிறார். வேணு சுப்பிரமணியம், ஸ்ரீதரன் இருவரும் துணை இயக்கம் செய்கிறார்கள். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு குழந்தை தீபாவளிக் கனவு காண்பதாக அமைந்திருக்கிறது இந்தக் கதை. தீபாவளியைத் தமிழிலே ஒளிவிழாவாகக் கொண்டாடும் வகையில் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்குகிறது.

மேலும் விபரங்களுக்கு: www.bayareatamilmanram.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com