வெயிலோடு விளையாடு


மகேஷ் நாயகனாகவும், தனன்யா நாயகியாகவும் நடிக்கும் படம் வெயிலோடு விளையாடு. மற்றொரு நாயகனாக அமல் நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, கஞ்சா கருப்பு, ஜெய்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சிறப்புத் தோற்றத்தில் விமல், சஞ்சனா சிங் நடிக்கின்றனர். கைப்பந்து விளையாட்டின் மீது சிறுவயதில் ஒருவனுக்கு ஏற்படும் பிடிப்பு எப்படி வெறியாக மாறி அவனை வெற்றியாளனாக மாற்றுகிறது என்பது படத்தின் கதை. எழுதி, இயக்குகிறார் என்.வி.ராம்குமார். இசை: கார்த்திக்ராஜா. படத்தில் இளையராஜா ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com