சண்ட படம்


முழுக்க முழுக்க சண்டைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் படம் 'சண்ட படம்' பிரபல ஸ்டண்ட் கலைஞர்களின் மகன்கள் நடிக்கும் இப்படத்தை ராம்கி இயக்குகிறார். தமிழ்நாட்டில் இருக்கும் பழமையான கோவில் ஒன்றில் அபூர்வமான புதையல் இருக்கிறது. அதைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது. நவீன ஆயுதங்களைக் கொண்ட அந்த கும்பலோடு போராடி பாரம்பரிய ஸ்டண்ட் கலைஞர்கள் எப்படி கோவிலைக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. நா. முத்துக்குமார் பாடல்களை எழுத, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com