மீண்டும் தில்லுமுல்லு


ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தில்லுமுல்லு. இப்படம் மீண்டும் தயாராகிறது. நாயகனாக சிவா நடிக்கிறார். நாயகியாக நடிப்பது இஷா தல்வார். முக்கிய வேடங்களில் டாக்டர் சீனிவாசன், பிரகாஷ் ராஜ், கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பத்ரி இயக்குகிறார். இப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன், யுவன்ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து முதன்முறையாக இசையமைக்கின்றனர்.

அரவிந்த்

© TamilOnline.com