எதையுமே வித்தியாசமாகச் சிந்திப்பவன், கிறுக்கனா அல்லது ஞானக் கிறுக்கனா என்று சொல்ல வருகிறது 'ஞானக் கிறுக்கன்'. இதில் நாயகனாக டேனியல் பாலாஜி நடிக்கிறார். நாயகியாக நடிப்பது செந்தி. இவர்களுடன் அர்ச்சனா கவி, சுஷ்மிதா, ஜகராஜ் உள்ளிட்ட பல புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இளையதேவன் இயக்குகிறார். இசை: தாஜ்நூர். "வித்தியாசமாக சிந்திப்பவர்கள் எல்லோருமே ஞானக்கிறுக்கன்தான். இந்தப் படத்தின் நாயகனும் எல்லா விஷயத்தையும் மாற்றி யோசிப்பான் அதில் வெற்றியும் பெறுவான். ஆனால் இந்த சமூகம் அவனைக் கிறுக்கன் என்று சொல்லும். கடைசியில் அவனை ஞானக் கிறுக்கன் என்று ஏற்றுக் கொள்ளும். ஏன், எப்படி என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் இயக்குநர் இளையதேவன்.
அரவிந்த் |