நளனும் நந்தினியும்
மைக்கேல் கதாநாயகனாகவும், நந்திதா கதாநாயகியாகவும் நடிக்கும் படம் நளனும் நந்தினியும். இவர்களுடன் ஜெய்பிரகாஷ், ரேணுகா, பானுசந்தர், சூரி, சாம்ஸ், அழகம் பெருமாள் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கடேசன். இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். இப்படம் பற்றி இயக்குநர், “இது முழுக்க முழுக்க காதல் படம். அதை ரசிக்கும்படியாகச் சொல்லியிருக்கிறோம். இரண்டு கதாபாத்திரங்கள் பற்றிய கதை" என்கிறார்.



அரவிந்த்

© TamilOnline.com