அமெரிக்காவின் முன்னணி சேடலைட் சேவையான டிஷ் தனது DISHWorldIPTV சேவையைக் கணினியில் பார்க்க வசதி செய்துள்ளது. இச்சேவை ஆரம்பத்தில் ரோக்கு தளத்தில் (Roku platform) மட்டும் கிடைக்கப்பெற்றது. தற்சமயம் Mac மற்றும் PCயிலும் டிஷ்வேர்ல்டைப் பெறமுடியும். DISHWorldIPTV இணையதளத்தில் கணக்கைத் தொடங்கி மென்பொருளைத் தரவிறக்கி விரும்பிய நிகழ்ச்சிகளைக் கணினியில் கண்டு களிக்கலாம்.
தவிர, ஃபேமிலி வியூ என்ற வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. "இதன்மூலம் தனித்தனிக் கணக்குகள் இல்லாமல், ஒரே கணக்கில் மூன்று சாதனங்களில் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். ஒவ்வொரு சாதனத்திற்கும் மாதக் கட்டணம் $10 மட்டுமே" என்கிறார் டிஷ்வேர்ல்டின் துணைத் தலைவர் திரு. க்ரிஸ் க்வெலிங். 20 புதிய சானல்களைச் சேர்த்து, தற்சமயம் ஏழு மொழிகளில் 72 சானல்களை டிஷ்வேர்ல்ட் வழங்குகிறது.
புதிய தமிழ் சானல்கள்: ஆதித்யா, கலைஞர், KTV, ஜெயா மேக்ஸ், ஜெயா ப்ளஸ், ஜெயா டிவி, சிரிப்பொலி, சன் மியூசிக், சன் டிவி, விஜய் இண்டர்நேஷனல்.
புதிய பயனாளர்கள் இரண்டுவாரத்திற்கு கட்டணமின்றித் தாங்கள் விரும்பும் சாதனங்களில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் சலுகை உள்ளது.
மேலும் விவரங்களுக்கு: தொலைபேசி: 1-877-811-4788 வலையகம்: www.dishworldiptv.com
டிஷ்வோர்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரும்பும் பிற மொழிச் சேனல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ottpartner@dish.com
செய்திக் குறிப்பிலிருந்து |