கணிதப்புதிர்கள்
1. 1, 8, 81, 1024, ..... இந்த வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

2. ஒரு கூடையில் சில ஆப்பிள்கள் இருந்தன. அவற்றை இரண்டிரண்டாகக் கூறு செய்தபோது ஒன்று மிஞ்சியது. மூன்று மூன்றாகக் கூறிட்ட போதும் ஒன்றே மீதம் இருந்தது. நான்கு நான்காகக் கூறு செய்தபோதும் 1 மீதம் இருந்தது. ஐந்து ஐந்தாகக் கூறு செய்தபோது ஏதும் மிஞ்சவில்லை என்றால் கூடையில் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை என்ன?

3. அது ஓர் இரண்டு இலக்க எண். சிற்றிலக்கங்களை முன்பின்னாகப் போட்டால் வரும் எண்ணுக்கும் அதற்கும் இடையேயான வித்தியாசம் 54 என்றால் அந்த எண் எது? அது போன்ற பிற எண்களைக் கூற முடியுமா?

4. இரண்டு எண்களின் பெருக்குத்தொகை 210. அவற்றின் இரு மடங்குகளின் கூட்டுத்தொகை 421. அந்த எண்கள் யாவை?

5. A.B,C என்ற மூன்று நபர்களின் வயதின் பெருக்குத்தொகை 48. அவர்களில் Cயின் வயது ஆறு வருடம் கழித்து 12 ஆகிறது என்றால் அவர் ஒவ்வொருவரின் வயது என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com