சர்க்கரை வள்ளி கார போளி
தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளி - 6
மைதா மாவு - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு
கொத்துமல்லி (நறுக்கியது) - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க

செய்முறை
சர்க்கரை வள்ளியைக் கழுவி நறுக்கி வேகவைத்து, உரித்துக் கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு வெடிக்கவிட்டு, உளுத்தம் பருப்பு, மிளகாய் தாளித்துப் போடவும். தேங்காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துப் பொரியல் போலச் செய்து கொள்ளவும். நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். மைதா மாவில் சிட்டிகை உப்பும், சிறிது எண்ணெயும் விட்டு போளி போல் மாவு பிசைந்து கொஞ்சம் ஊற வைக்கவும். இலை அல்லது அலுமினிய ஃபாயிலில் எண்ணெய் தடவி மைதா மாவில் சிறிது எடுத்துப் பரத்தி, நடு்வில் கிழங்குப் பூரணம் வைத்து மூடித் தட்டி தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். மேலாக நெய் தடவிச் சாப்பிடலாம். சுவை மிக்கது இது. தேங்காய் இல்லாமல் காய்கறிகளுடன் வதக்கியும் செய்யலாம். காய்கறிகள் நன்கு வேக வைத்து மசித்தால், அகலமாகத் தட்டக் கஷ்டமில்லாமல் இருக்கும்.

தங்கம் ராமஸ்வாமி,
ப்ரிட்ஜ்வாடர், நியூ ஜெர்சி

© TamilOnline.com