தேவையான பொருட்கள் சர்க்கரை வள்ளி - 5 சர்க்கரை - 1 1/2 கிண்ணம் மைதா - 2 மேசைக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 5 உப்பு - 1 சிட்டிகை சோடா உப்பு - 1 சிட்டிகை எண்ணெய் - பொரிக்க
செய்முறை சர்க்கரை வள்ளிக் கிழங்கைக் கழுவி, வேகவைத்துத் தோல் உரிக்கவும். கட்டியில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும். ஒரு தாம்பாளத்தில் சோடா உப்பு, நெய், உப்பு போட்டு நன்றாகத் தேய்த்துக் குழைத்தால் நுரைபோல் வரும். அதில் மைதாவையும், சர்க்கரை வள்ளியையும் சேர்த்துப் பிசைந்து சிறிது சிறிதாகத் தட்டிக் கொள்ளவும். அதை, காய்ந்த எண்ணெயில் பொரிக்கவும். ஏலக்காய் போட்டு, சர்க்கரையை கெட்டிப் பாகு வைத்துக்கொள்ளவும். பொரித்து வைத்துள்ள பாதுஷாக்களை அதில் போட்டு எடுத்துத் தாம்பாளத்தில் வைத்து மேலாகவும் கொஞ்சம் பாகு ஊற்றவும். முந்திரி வறுத்து மேலாகப் போடலாம். செர்ரிப் பழத்தை நறுக்கியும் மேலாக அலங்கரிக்கலாம். இது மிகவும் சுவை மிக்கது.
தங்கம் ராமஸ்வாமி, ப்ரிட்ஜ்வாடர், நியூ ஜெர்சி |