ஆகஸ்ட் 10, 2012 அன்று, அட்லாண்டாவிலுள்ள கேட்ஸ் லில்பர்ன் தமிழ்ப் பள்ளியின் கல்வியாண்டு தொடக்க விழா நடைபெற்றது. மாணவர்கள் சேர்க்கை, பழைய மாணவர்கள் பதிவு, பாட நூல் வழங்குதல் ஆகியவை நடந்தன. இவ்வாண்டு அமெரிக்கப் பெண்மணி ஒருவரும் பள்ளியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இவ்வாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் தமிழுக்கான கிரடிட்டுகள் பெறுவார்கள். மேலதிகத் தகவல்களுக்குத் பள்ளி முதல்வர்: டாக்டர். இரவி பழனியப்பன் அல்லது துணை முதல்வர்: திருமதி. வாணி மனோகரன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.
தகவல்: உமா பாபா |