BATM: முத்தமிழ் விழா
ஆகஸ்ட் 12, 2012 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் முத்தமிழ் விழாவை ஷிர்டி சாய்பரிவார் அரங்கில் விமரிசையாகக் கொண்டாடியது. நிகழ்வின் ஒரு பகுதியாக மு. வரதராசனார் நூற்றாண்டு விழா இடம்பெற்றது. அதில் மு.வ. அவர்களின் உரைநடை மற்றும் புதினங்களில் தமிழ் ஆளுமை பற்றி டில்லி துரை, சொக்கலிங்கம், செயகுமார் ஆகியோர் உரையாற்றினர். மு.வ. நூற்றாண்டு விழாக் கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, விழாவின் சிறப்பம்சமாக பேரா. முனை. ர. விஜயலட்சுமி 'காலந்தோறும் பெண்கள்' என்ற தலைப்பில் இலக்கியப் பேருரை ஆற்றினார். பின்னர் இசை விற்பன்னர் அசோக் சுப்ரமண்யம் 'தென்னிந்தியத் தொல்லிசை மரபு' என்ற தலைப்பில் விரிவான இசையுரை ஒன்றை வழங்கினார். மன்றத் தலைவர் பிரபு வெங்கடேஷ் தலைமையுரை ஆற்றினார்.

இந்திரா தங்கசாமி,
சான் ரமோன்

© TamilOnline.com