நான்காம் பிறை


ஆங்கிலத்தில் வெளியாகி எல்லோரையும் பயமுறுத்திய படம் "ட்ராகுலா" அந்த ட்ராகுலா கதையை மையமாக வைத்து 3டியில் உருவாகி வரும் படம் நான்காம் பிறை. இப்படத்தில் பிரபு, நாசர், கிருஷ்ணா, சுதீர், சாரதா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்யன் கதாநாயகன். படத்தின் முக்கிய காட்சிகளை, ருமேனியா நாட்டில் உள்ள, டிராகுலா மாளிகையில் படமாக்கி வருகின்றனர். "ஹாரிபாட்டர்", "அவதார்" படங்களில் பணிபுரிந்த பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிகின்றனர். கதை, திரைக்கதை எழுதி வினயன் இயக்குகிறார். இசை : பபித்ஜார்ஜ்.

அரவிந்த்

© TamilOnline.com