1. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
23, 45, 89, 177, ?
2. 1, 6, 9 ஆகிய எண்களையும் +, -, x, ., : மற்றும் வர்க்கம், ( ) ஆகியவற்றையும் பயன்படுத்தி எண் 1000 விடையாக வரவழைக்க முடியுமா?
3. மூன்று குழந்தைகளின் வயதின் பெருக்குத் தொகை 36. அவர்களில் இரட்டைப் பிறவிகளான இரண்டு குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் படிக்கின்றனர். மூவரின் வயதுகள் என்னென்ன?
4. 8723, 3872, 2387 வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
5. ராமுவிடம் 100 மீட்டர் கயிறு உள்ளது. 1 மீட்டர் கயிற்றை வெட்ட 1/2 நிமிடம் ஆகும் என்றால் 100 மீட்டர் கயிற்றை வெட்டி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
அரவிந்த்
விடைகள்1. எண்தொடர் (x*2-1) என்ற வரிசையில் அமைந்துள்ளன. 23*2 - 1 = 45; 45*2 - 1 = 89; 89*2 - 1 = 177. ஆகவே அடுத்து வர வேண்டிய எண் = 177*2 - 1 = 353.
2. முடியும். (1 + 9)(9 - 6) = 103 = 10 x 10 x 10 = 1000.
3. குழந்தைகளின் வயதின் பெருக்குத் தொகை 36 எனில் அவை 1 x 6 x 6 அல்லது 2 x 2 x 9 அல்லது 3 x 3 x 4 ஆகவோ மட்டுமே இருக்க முடியும். இரட்டையர் ஒன்றாம் வகுப்பில் படிக்கின்றனர் எனில் அவர்கள் வயது 6 இருக்க வேண்டும். ஆகவே, 1 x 6 x 6 என்பதன்படி, மூன்றாவது குழந்தையின் வயது 1.
4. சிற்றெண்களின் வைப்புமுறை மாற்றாக எண்கள் அமைந்துள்ளன. அதாவது முதல் எண்ணின் இறுதிச் சிற்றெண்ணே, இரண்டாவது எண்ணின் முதலில் வந்துள்ளது (8723 அடுத்து 3872). இரண்டாவது எண்ணின் இறுதிச் சிற்றெண் மூன்றாவதன் முதல் எண்ணாக அமைந்துள்ளது (3872 அடுத்து 2387). அடுத்த எண் 7ல் தொடங்க வேண்டும். ஆக, அடுத்து வர வேண்டிய எண் 7238.
5. 99 மீட்டர் வெட்டினாலே மிகுதியான 1 மீட்டரும் வந்து விடும் என்பதால் 99*1/2 = 49 1/2 நிமிடம் ஆகும்.