The Dog and the Bell
A dog used to run up quietly behind people, and to bite them without notice. ஒரு நாய் சத்தமில்லாமல் மக்களின் பின்னே ஓடிப்போய் அவர்களை முன்னறிவிப்பில்லாமல் கடித்துக் கொண்டிருந்தது.
His master suspended a bell about his neck so that people might notice the Dog's presence. நாயின் எஜமானர் அதன் வருகை மக்களுக்குத் தெரியட்டும் என்று நாயின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிட்டார்.
Thinking it a mark of honor, the Dog grew proud of his bell and went tinkling it all over the town. அதை ஒரு கௌரவமாகக் கருதிய நாய், அந்த மணியை ஒலித்தபடியே ஊர் முழுவதும் சுற்றி வந்தது.
An old hound saw this and told him, "Do not make such a spectacle of yourself. That bell around your neck is not an order of merit, but a mark of disgrace. It is warning to the public to avoid you as an ill mannered dog." ஒரு கிழட்டு வேட்டைநாய் இதைப் பார்த்துவிட்டு, "உன்னை இப்படி ஒரு வேடிக்கைப் பொருளாக்கிக் கொள்ளாதே. உன் கழுத்தில் இருக்கும் மணி வீரப் பதக்கமல்ல, அவமானச் சின்னம். ஒரு மரியாதை தெரியாத நாய் வருகிறதென்று மக்களை அது எச்சரிக்கிறது" என்று கூறியது.
Notoriety is often mistaken for fame. ஏளனத்தைப் புகழென்று எண்ணுவோர் உளர்.
(Aesop's Fables-ஈசாப் நீதிக் கதைகள்) |