2012 ஜூலை மாதத்தில் அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி சிகாகோ, வாஷிங்டன் டி.சி., நியூயார்க், பாஸ்டன், டொரன்டோ (கனடா) ஆகிய இடங்களுக்கு வருகை தந்தார். அம்மா தம்மைக் காணவந்த அனைவரையும் பரிவோடு அரவணைத்து அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மிக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மிக முகாமில் (retreat) ஆன்மிக மற்றும் தியான வகுப்புகள், சேவை, கேள்வி-பதில், உணவு பரிமாறல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.
அம்மாவின் அமுத மொழி: "ஒவ்வொரு மனோபாவத்திற்கும் ஏற்ப அதிர்வுகள் ஏற்படும். அதற்கேற்ற பலனும் உண்டாகும். சிரிக்கும்போது எழும் அதிர்வுகள் கோபப்படும் போது எழுவதில்லை. கோபம் என்பது இருபுறமும் கூர்மையுள்ள பிடியில்லாத கத்தியைப் போன்றது. அது கோபத்திற்கு ஆளாபவருக்கும், கோபப்படுவருக்கும் தீங்கு விளைவிக்கும். அப்படிப்பட்ட இயல்புகளை நாம் திருத்திக்கொள்ள வேண்டும்."
மனித மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர் |