BATM நிகழ்ச்சிகள்
முத்தமிழ் விழா
ஆகஸ்ட் 12, 2012 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் முத்தமிழ் விழா மதியம் 2 மணிக்கு மில்பிடாஸ் ஷிர்டி சாயி பரிவார் அரங்கத்தில் நடைபெறும். இதில் மு.வ. நூற்றாண்டு விழாவை ஒட்டி அவர் குறித்த காணொளி, கவிதைகள், திறனாய்வுரைகள் இடம்பெறும். பின்னர், 'இலக்கியத்தில் மகளிர்' என்ற தலைப்பில் பேரா. அர. விஜயலட்சுமியும், 'தென்னிந்திய தொல்லிசை மரபு' என்ற தலைப்பில் அசோக் சுப்ரமணியமும் சொற்பொழிவுகளை வழங்குவர். அனுமதி இலவசம். விபரங்களுக்கு: www.bayareatamilmanram.org

கைப்பந்துப் போட்டி
நீங்கள் விளையாட்டுப் பிரியரா? ஆகஸ்ட் 25, 2012 அன்று, காலை 7 மணிக்கு ஃப்ரீமாண்ட் எலிசபெத் ஏரிப் பூங்காவில் தமிழ் மன்றம் (BATM) நடத்தும் கைப்பந்து (Volley Ball) போட்டியில் பங்கேற்க வாருங்கள். அணியைப் பதிவு செய்ய: http://tinyurl.com/7dpzfnp

கோடைச் சிற்றுலா
ஆகஸ்ட் 25, 2012 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கான கோடைச் சிற்றுலா எலிசபெத் ஏரிக்கரை மத்தியப் பூங்காவில் காலை 10 மணி முதல்
பல்வேறு வேடிக்கை விளையாட்டு வினோத நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். உறுப்பினர்களுக்கு மட்டும். முன்பதிவு செய்ய: http://tinyurl.com/87r9hn3

வேணு ரங்கநாதன்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com