மிச்சிகனின் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் நகரத்தைச் சேர்ந்த மிருத்திகா செந்தில், அமெரிக்கன் கில்ட் ஆஃப் மியூசிக் (AGM) நடத்திய போட்டிகளில் கிடார் வாத்தியத்தில் தான் பங்கேற்ற நான்கு பிரிவுகளிலும் கோப்பையை வென்றுள்ளார்! Length of Study, Test List, Age Achievement பிரிவுகளில் முதல் பரிசையும், Pop பிரிவில் இரண்டாவது பரிசையும் வென்றார். 7 வயதான தமிழ்வழி வந்த மிருத்திகா, தேசிய அளவில் மாணவர்கள் பங்கேற்ற போட்டியில், கிடார் (Guitar) வரிசையில், இளம் பங்கேற்பாளர் என்பதும் குறிப்பிடதக்கது. தேசிய அளவில் தலைசிறந்த கிடார் மாணவர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். பழமை வாய்ந்த சர்வதேச இசையமைப்பான அமெரிக்கன் கில்ட் ஆஃப் மியூசிக், தனது 111வது தேசிய அளவிலான இசை மாநாடு மற்றும் போட்டிகளை, ட்ராய் (டெட்ராயிட்) நகரத்தில் ஜூலை 19 முதல் ஜூலை 22 வரை நடத்தியது. போட்டியில் 500 மாணவர்கள் கிடார் உட்படப் பலவகை இசைக்கருவிகளுக்கான இரண்டாயிரம் வெவ்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்றனர்.
மிருத்திகா இசைத்துறையில் இன்னும் பெரிய உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்! |