குறுக்காக
5. நொறுக்கு பனித்துளியில் படர்ந்த நெருப்பு (2) 6. ஏனோ இவ்வூர் சாவிக்குப் பெயர் போகவில்லை (6) 7. ஏற்ற முதலெழுத்து கடையெழுத்தின்றி கார்த்திகேயன் (4) 8. பிரிவையும் சொல்லும் (3) 9. மாலையில் கண்ணனிடம் இருப்பது (3) 11. திண்டாடு பின்னர் இறுதியாகச் செய்யாமல் ஒதுக்கு (3) 13. பேச்சு வழக்கில் அழைக்க பசுவின்றி ஆல் பெறுதல் (4) 16. அதிகப் பாசங்கொண்ட தாத்தாவின் செல்லம் பாதி தாவாயடைப்பு (6) 17. கைலாசவாசி துவாரபாலகர்களை மாற்றி முடி (2)
நெடுக்காக
1. தித்திப்பு தோன்ற இக்கனி சிதையும் (4) 2. தவித்து திருப்பு முனை மாற்றி எழுதியிருப்பது (5) 3. கண் பூச்சுக்கு முன் பாதி கொடுத்து சித்ரவதை (3) 4. கர்நாடக முதல்வர் வெளியே இல்லாமல் அப்புறப்படுத்து (4) 10. உடுக்கு இசைப்பவன் இருப்பிடத்தில் எதிர்த்து வாசி, தாள ஒழுங்கோடுதான் (5) 12. பையில்லா நாட்டியக்காரி ஸ்வரமில்லா நதியில் ஆடுவது பார்க்க அழகாக இருக்காது (4) 14. ராகம் தொடங்கும் முன் ஏழை உணவு தாளம் தட்டுவது (4) 15. இவ்வாசல் நந்திக்கும் முன்னே உயர்ந்திருக்கும் (3)
வாஞ்சிநாதன் vanchinathan@gmail.com
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை பிப்ரவரி 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. பிப்ரவரி 15க்குப் பிறகு, விடைகளை http://www.tamilonline.com/thendral என்ற சுட்டியில் காணலாம்.
சென்ற மாத புதிர்மன்னர்கள்
வி.சந்திரசேகரன், சன்னிவேல், கலி. சிவா சேஷப்பன், ·ப்ரீமாண்ட், கலி. சிங்காநல்லூர் கணேசன்
புதிர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத் துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
ஜனவரி 2006 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக: 3. சவக்களை, 6. பகட்டு, 7. வீக்கம், 8. தங்கக்காசு, 13. நல்லெண்ணம், 14. புராதன, 15. உளமார, 16. பதுங்கும் நெடுக்காக: 1. அபராதம், 2. ஒட்டகம், 4. வலை வீசு, 5. கலகம், 9. காவல், 10. கண்ணாளன், 11. கம்பீரம், 12. தீராதது, 13. நனவாகு |