கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா!!
ஏப்ரல் 13, 2012 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் 'சித்திரைத் திருவிழா' நந்தன தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை பிரிஸ்டல் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடியது. 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காகச் சிறப்பு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழாவின் சிறப்பு அம்சமாக க்ரேசி மோகன் மற்றும் குழுவினரின் 'சாக்லேட் கிருஷ்ணா' என்னும் நகைச்சுவை நாடகம் நடைபெற்றது. விழா நடைபெற்ற நாள் ஒரு வெள்ளிக் கிழமை என்ற போதும் அரங்கம் நிறைந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாகும்.

பரிதிமால்,
கனெக்டிகட்

© TamilOnline.com