மேகலா நீலகண்டன்: இசை அரங்கேற்றம்
மே 26, 2012 அன்று குரு லதா ஸ்ரீராமின் ஸ்ரீலலிதகான வித்யாலயா மாணவி மேகலா நீலகண்டனின் கர்நாடக இசை அரங்கேற்றம் சான் ரமோனில் உள்ள டோயெர்டி வேல்லி நிகழ்கலை மையத்தில் நடைபெற்றது. லக்ஷ்மி சுப்ரமணியத்தின் வயலினும், ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் மிருதங்கமும் நிகழ்ச்சிக்கு பக்க பலமாயிருந்தன. சக்ரவாகம், கரஹரப்ரியா ராக ஆலாபனைகளும் கல்பனா ஸ்வரமும் மிகவும் சிறப்பாக இருந்தன. துவிஜாவந்தியில் அமைந்த அகிலாண்டேஸ்வரி, சாருகேசியில் ஆயிரம் ஆயிரம், தொடர்ந்து சங்கீத சாம்ராஜ்ய சஞ்சாரிணியை மோஹன ராகத்தில் பாடியதும் அரங்கில் களை கட்டியது. தில்லானா ராகமாலிகையும், திருப்புகழும் மனதிற்கு இதமாயிருந்தன. மேகலா நீலகண்டன் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவில் 2005ம் வருடம் சங்கீதம் கற்க ஆரம்பித்து 2012ம் வருடம் அரங்கேற்றம் செய்துள்ளார். இப்பெருமை குரு லதா ஸ்ரீராம் அவர்களையே சாரும்.

கௌசல்யா சுவாமிநாதன்,
ப்ளசன்டன்

© TamilOnline.com