திருக்குறள் வினா விடை - 2
வினா:

1. இந்தச் செய்கையினால் ஆகும் செல்வம் அளவு கடந்து ஆவதுபோலப் பெருகிப் பின் கெடும். அது என்ன?
2. முகத்தில் சிரிப்பையும் அகத்தில் உவகையையும் (மகிழ்ச்சி) கொல்லும் இதனை விடப் பிற பகை ஒருவருக்கு உண்டோ! அது என்ன?
3. கெட்டுப் போகவேண்டும் என்னும் தன்மை இருப்பவருக்கு விருப்பமான நான்கு நகைகள் என்னென்ன?
4. இது ஒருவரின் குடும்ப ஆட்சியில் தங்கினால் அது அந்தக் குடும்பத்தை அவரின் பகைவருக்கு அடிமையாகப் புகுத்திவிடும். அது என்ன?
5. இவர்களுக்குத்தான் "நாம் வாழ்கிறோம்" என்னும் செருக்குப் பெருமிதம் அமையும். அவர்கள் யார்?

விடைகளை பார்க்க


பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com