ஜூன் 16, 2012 அன்று ஈஷா தியான அன்பர்கள் 3வது ஆண்டுவிழாவை அலமேடா கம்யூனிடி மையத்தில் ஈஷா உத்சவமாகக் கொண்டாடினர். தமது குடும்பம், நண்பர்களுடன் இசை, நடனம் மற்றும் தியானத்தை ஒன்று சேர்ந்து அனுபவிக்கும் வாய்ப்பை இவ்விழா கொடுத்தது. சான் பிரான்சிஸ்கோ மற்றும் சான் ஹோசே பகுதிகளில் வசிக்கும் ஈஷா இசைக்குழுவின் இசையில் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்புவிருந்தினர் ராதே ஜக்கி அவர்கள் வழங்கிய நாட்டியத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரித்தார். சென்னை கலாக்ஷேத்திராவில் நடனம் பயின்றவர் ராதே. இவரது நடனத்தில் தந்தையார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் யோகப் பரிமாணத்தையும், நீண்ட பயிற்சியின் பக்குவத்தையும் காண முடிந்தது.
கலை இசை நிகழ்ச்சி, எழுச்சியூட்டும் வீடியோக்கள், வழிநடத்தப்பட்ட தியான நிகழ்ச்சி போன்றவை முழுமையான உணர்வை வழங்கின. ஈஷா அறக்கட்டளை, மதச் சார்பற்ற, லாப நோக்கமற்ற பொதுச்சேவை நிறுவனம். மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்குத் தேவையான சக்தி வாய்ந்த யோகப் பயிற்சிகளைக் கற்று கொடுப்பதோடு மனித நல, சமூக நல மற்றும் சுற்றுச்சூழல் நலத்தை நிலைநிறுத்தும் திட்டங்களை பெரிய அளவில் நடைமுறைப்படுத்தவும் இது பணிபுரிகிறது.
விபரம் அறியவும், சத்குரு வீடியோக்களைப் பார்க்கவும், இலவச தியான நிகழ்சிகளில் பங்குபெறவும் தொலைபேசி எண்: 1-866-424-4742
செய்திக்குறிப்பிலிருந்து |