தேவையான பொருட்கள்: அவல் - 1 கிண்ணம் கடலை மாவு - 1/2 கிண்ணம் காரட், காலி ஃப்ளவர், உருளைகிழங்கு எல்லாம் சேர்த்து - 1 கிண்ணம் பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப ப்ரட்க்ரம்ஸ் - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: அவலை ஊறவிட்டு கடலைமாவு, உப்பு சேர்த்து பிசையவும். காய்கறிகளை காரட் துருவியில் துருவி வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி மிளகாயையும் வதக்கி அவலுடன் போட்டுப் பிசைந்து ப்ரெட் க்ரெம்சில் இருபுறமும் புரட்டி தோசைக் கல்லில் போட்டு
எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும். இதனை அவனில் வைத்தும் எடுக்கலாம்.
இவை தவிர பலாப்பழம் பாகுடன் போட்டு அவல் வறுத்து பொடி செய்து புட்டு செய்யலாம். சாதாரண உப்புமாவும் அவலில் செய்யலாம்.
தங்கம் ராமசாமி |