ROKU நிகழ்வோடைத் தளத்தில் DISH உலகச் சேவை
ரோகுவின் (Roku Inc.) நிகழ்வோடைத் தளத்தில் (streaming platform) டிஷ் வேர்ல்ட் சர்விசை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை இரண்டு நிறுவனங்களும் செய்து கொண்டிருக்கின்றன. இந்தச் சேவையில் தமிழ், தெலுங்கு சேவைகள் வழங்கப்பட உள்ளன. தற்போது இதில் ஹிந்தி, உருது, வங்காள மொழியின் முக்கியச் சேனல்கள் வழங்கப்படுகின்றன.

ரோகுவின் பயன்படுத்த எளிதான கருவிகள் கடைகளிலும் இணையத்திலும் குறைந்த விலையில் வாங்கக் கிடைக்கின்றன. "அடுக்ககம் (apartment), இணையகம் (condo), பொதுத் துயிற்கூடம் (dormitory) போன்றவற்றில் வசிப்போர் சேடலைட் டிஷ் இல்லாமலே தமது மொழிச் சேனல்களைக் கண்டு ரசிக்க இது வழி செய்யும்" என்கிறார் கிறிஸ் குவெலிங் (உபதலைவர், டிஷ் நெட்வொர்க்).

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com