ஜூலை 2012: கணிதப் புதிர்கள்
1. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 121; அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் 25. அந்த எண்கள் யாவை?

2. அது ஒரு மூன்று இலக்க எண். அதன் இலக்கங்களை ஒன்றோடு ஒன்று கூட்டி வரும் விடையும் பெருக்கி வரும் விடையும் சமம் என்றால் அந்த எண் எது?

3. ஒரு மரக்கிளையில் சில கிளிகளும் மைனாக்களும் அமர்ந்திருந்தன. கிளிகளின் எண்ணிக்கை மைனாக்களை விட 20 அதிகமாக இருந்தது. சற்று நேரத்தில் 10 மைனாக்களும், 10 கிளிகளும் அதே மரக்கிளையில் வந்து அமர்ந்தன. தற்போது கிளிகளின் எண்ணிக்கை மைனாக்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு ஆகிவிட்டது என்றால் முதலில் இருந்த கிளிகள் எத்தனை, மைனாக்கள் எத்தனை?

4. ஒரு மருத்துவமனையில் மொத்தம் 524 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் சிலர் வாய் பேச முடியாதவர்கள். சிலர் பார்வையற்றவர்கள். சிலருக்கு காது கேட்காது. வாய் பேச இயலாதவர்களின் எண்ணிக்கை 311. காது கேட்காதவர்களின் எண்ணிக்கை 279 என்றால் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

5. 3, 6, 21, 231, ... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது? ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com