ஏப்ரல் 1, 2012 அன்று, 'Concerts of Compassion' தொடரில் மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்களின் உலகளாவிய மனிதநேயத் தொண்டுகளுக்கு நிதி திரட்டும் வகையிலும், இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாதா அமிர்தானந்தமயி சென்டரில் இந்திய இசை நிகிழ்ச்சி நடைபெற்றது. இதில் 'கர்னாடிக் சேம்பர் கான்சர்ட் குரூப்' குழந்தைகள் இசை, பிரசன்னா ராஜனின் புல்லாங்குழல் இசை, நசிகேத் யக்கொண்டியின் ஹிந்துஸ்தானி இசை ஆகியவை இடம்பெற்றன.
நிகழ்ச்சி சாரதா பஜனை மண்டலியின் சம்பிரதாய பஜனையுடன் ஆரம்பித்தது. ரமேஷ் ஸ்ரீனிவாசன் அளித்த தாளவாத்தியக் கச்சேரி, வேலூர் ராமபத்ரன் அவர்களுக்கு அஞ்சலியாக அமைந்தது. திவ்யமோகனின் குரலிசைக் கச்சேரி செவிக்கு விருந்து. வளரும் கலைஞர் பிரசன்னா சிறப்பான புல்லாங்குழலிசை வழங்கினார். நசிகேதின் கச்சேரி மிகத் துல்லியமாக அமைந்திருந்தது.
சேதுராமன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |