மே 13, 2012 அன்று அன்று டெட்ராயிட் ஸ்ரீ பாலாஜி கோவில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் சேர்ந்து ஸ்ரீ ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை ஸ்ரீ பாரதிய கோவில், ட்ராய், மிச்சிகன் அரங்கத்தில் கொண்டாடினர். திருமலை திருப்பதி தேவஸ்தான புரோகிதர்கள் ஸ்ரீதர் பட்டர், ரமணன், ஸ்ரீனிவாசன், பிரஹலாத் பட்டர், சரத்குமார், சந்திரசேகர மௌலி, மல்லிகார்ஜுன ராஜு, சடகோபன், சாஸ்திரி, ராமச்சந்திர பட், ரமேஷ் பட் ஆகியோர் சிறப்பாக வைபவத்தை நடத்திக் கொடுத்தனர்.
கனடாவைச் சேர்ந்த சித்ரவேல், ஸ்ரீராம் குழுவினரின் நாதஸ்வரத்துடன் காலையில் வைபவம் தொடங்கியது. முதலில் சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டகம் ஆகியவை கூறப்பட்டன. பிறகு தேவிகா ராஜன், நிரஞ்சனா இருவரும் அன்னமாசார்யர் கீர்த்தனைகளைப் பாடினர். 2000க்கு மேலான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருக்கல்யாண வைபவத்தில் ஸ்ரீ பெருமாள்-தாயார் புறப்பாடும், மாலை மாற்றுதலும் நாதஸ்வரம், வேத கோஷம், திவ்யப் பிரபந்தம், தெலுங்கு கீர்த்தனைகளுடன் நடைபெற்றது. மாலையில் சத்யநாராயண பூஜை நடைபெற்றது.
ஸ்ரீதர் வெங்கடாசாரி, டெட்ராயிட், மிச்சிகன் |