NETS: சித்திரை விழா
மே 19, 2012 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் தனது சித்திரை விழா நிகழ்ச்சியில் 'நாடகத் திலகம்' ஒய்.ஜி. மகேந்திராவின் U.A.A. வழங்கிய 'வெங்கடா3' என்னும் நகைச்சுவை நாடகத்தை மால்பரோ உயர்நிலைப் பள்ளியில் அரங்கேற்றியது. சிகாகோ திருவேணி குழுவினருக்குப் பயிற்சி அளித்து பாஸ்டனில் இந்நாடகத்தை அளித்தபெருமை ஒய்.ஜி. மகேந்திரா, ராம் ரமணன் ஆகியோரைச் சாரும். நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத் தலைவர் ரமேஷ் வெங்கடரமணி மகேந்திரனுக்குப் பொன்னாடை போர்த்தினார். பமிலா வெங்கட் நன்றியுரை வழங்கினார்.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com