சர்க்கரைவள்ளிப் பொரியல்
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ மிளகாய்த் தூள் - 1/2 மேசைக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு தேங்காய் துருவல் - 1 சிறிய கிண்ணம் மஞ்சள் தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தாளிப்பதற்கு கறிவேப்பிலை
செய்முறை
சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு நன்றாகக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங் காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும். துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள வள்ளிக் கிழங்கை அத்துடன் போட்டு வதக்கவும்.
சிறிது நேரம் கழித்து உப்பு மற்றும் கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு வாணலியை ஒரு தட்டினால் மூடி வேகவிடவும்.
காய் நன்றாக வெந்தவுடன், மிளகாய்த் தூளும், தேங்காய் துருவலும் போடவும். நன்றாகக் கிளறி கறிவேப்பிலை போடவும்.
மிளகாய்த் தூளுக்கு பதில் மிளகாய் வற்றல் தாளித்தும் செய்யலாம்.
குறிப்பு: தோல் சீவ வேண்டியதில்லை.
தங்கம் ராமசாமி |