சிங்கம் - 2


ஹரியின் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் சிங்கம். இதன் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கிறது. சூர்யா இதில் நாயகனாக நடிக்க இருக்கிறார். நாயகியாக ஹன்சிகா மொட்வானி மற்றும் அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர். ஹன்சிகாவுக்கு இதில் பள்ளி மாணவி வேடம். விவேக், விஜயகுமார், ராதாரவி, நாசர், ரகுமான் ஆகியோருடன் சந்தானமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாடல்களை நா. முத்துக்குமார், விவேகா, மதன் கார்க்கி ஆகியோர் எழுத தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிற்காக முதன்முறையாக வெளிநாடு செல்ல இருக்கிறார் ஹரி.

அரவிந்த்

© TamilOnline.com