ஜூன் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக:
5. யார் போலி கனி என்ற குழப்பத்தில் ஒரு மாநிலம் (6)
6. எண்ணம் தொடங்கி முடியும் உறுப்பு (2)
7. அறிவுகெட்ட நட்சத்திரங்களே கூடிய இரவோ? (4)
9. 70 மி.மீ படத்தைப் பார்க்கத் தேவையான சிறிய கால அளவு (4)
10. அந்தக் கொடுமையான காரியத்தைச் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டியவன் இல்லை (4)
12. கடித்துத் துப்புவதை எறிந்து நரகம் வந்து வம்பில் சிக்க எல்லை (4)
13. எனக்குள் உள்ளே எதுமில்லையா? வசதி இல்லாதவனுக்கு உருண்டை இருக்கும் (2)
14. கண்டு கொள்ளாமல் ராமு குடியிருக்கும் நாய் வால் வைத்த பாகமா? (6)

நெடுக்காக:
1. ஒன்றாகப் பிணைப்பதில் பாதி போய் பெரும்பயம் (2)
2. அலுப்பு காட்டாத சோழர் இடையொடித்து உடலின் பக்கவாட்டுப் பகுதியை ஒட்டவைத்தார் (4)
3. முடிவில்லா நியதி மாயா மாற்றியது நேர்மையானதா? (4)
4. முதலில் விற்பனையான சித்திரம் விநோதம் (6)
8. வள்ளி தலைதூக்கும் முன் புரட்ட வணக்கத்துக்குரியவர் படுத்திருப்பது (6)
12. படம் போடுவது எப்படி எனச் சொல்லும் விதி? (4)
14. சேவிக்கப்படுபவர் பெருநஷ்டத்தால் மெல்லினம் மாற்றிச் சேவிக்கப்படுபவர் (2)

வாஞ்சிநாதன்

மே 2012 விடைகள்

© TamilOnline.com