சச்சரவு செய்தி
மத வாதக் குழுக்களின் முறையீடுகள் உணர்ச்சிகளை மதிக்கும் சரியான வரலாற்றுக்கு வழிவகுக்கின்றனவா அல்லது இனிப்பு பூசி உண்மையை மறைக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. மாணவர்களுக்கு இது நல்லதா கெட்டதா? மதவாதக் குழுக் களின் ஈடுபாடு கல்விமான்களுக்கும் மதநம்பிக்கை யாளருக்கும் மோதலுக்குத் தான் வழி வகுக்கிறது என்கிறார் மாநிலக் கல்வி வாரியக்குழு உறுப்பினர் கென்னத் நூனன்.
இஸ்ரேலிய அடிமைகள் எகிப்தி லிருந்து வெளியேறியதாக வரும் பைபிள் செய்திகளுக்கு அகழ்வாராய்ச் சியிலும், பண்டைய எகிப்திய ஆவணங்களிலும் சான்றுகள் இல்லை என்று குறிப்பிட்ட ஒரு பாடநூல் ஒரு யூதக்குழுவின் அதிருப்திக்கு ஆளானது. அது உண்மைதான் என்றாலும், அதே நம்பாத தன்மை ஏன் இஸ்லாமிய, மற்றும் கிறித்தவ மதங்கள் பற்றிய பாடங்களில் இல்லை என்று இந்தக் குழு கேட்டது.
தீவிரவாதத்தையும், போர்களையும் உசுப்பி விடும் மதவெறியை மாணவர் கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எந்த மதத்தையும் குறை கூறி அந்த மதங்களை நம்புவோரைத் தாழ்த்தும் எண்ணத்தைத் தூண்டி விடக்கூடாது என்ற கலி·போர்னியா நெறிமுறைகள் நடைமுறையில் அமலாக் குவது கடினம்.
டேனியல் கோல்டன், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஜனவரி 25, 2006 |