தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கிண்ணம் பெரிய வெங்காயம் - 1 சின்ன உருளைக்கிழங்கு - 10 தேங்காய்ப் பால் - 1 கிண்ணம் தண்ணீர் - 1 கிண்ணம் பிரிஞ்சி இலை -2 உப்பு - தேவையான அளவு
வறுத்தரைக்க: லவங்கப்பட்டை (சிறியது) - 1 சோம்பு - 1 தேக்கரண்டி வெங்காயத் தாள் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம் மிளகாய் வற்றல் - 3 பச்சைமிளகாய் - 4 முந்திரி பருப்பு - 6-8
செய்முறை: பாசுமதி அரிசியைப் பத்து நிமிடம் ஊறவைத்துத் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் பிரிஞ்சி இலையையும் போட்டு வதக்கிக் கொள்ளவும். சின்ன உருளைக்கிழங்குகளை நான்காக வகிர்ந்து கொள்ளவும். இதையும் போட்டு, வறுத்தரைத்த மசாலாவையும், ஊற வைத்த அரிசியையும் சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப் பாலையும், தண்ணீரையும் விட்டு, தேவையான அளவு உப்புச் சேர்த்து, பின்பு குக்கரில் மூன்று விசில் வரும்வரை வைத்து எடுக்கவும். சுவையான, சுலபமான ஆலூ பாத் தயார்.
ராஜீ ராமதாஸ், அட்லாண்டா, ஜார்ஜியா |