திருப்பங்கள்


நந்தா, ஆண்ட்ரியா நாயக, நாயகியாக நடிக்கும் படம் திருப்பங்கள். இவர்களுடன் மும்பை நடிகர்களான கௌதம் க்ரூப், நடிகை சுர்விர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குழந்தை முதல் பெண்கள், இளைஞர்கள் வரை ஒவ்வொருவரும் திடீர் திடீரென கடத்தப்படுகின்றனர். இவர்கள் ஏன் கடத்தப்படுகின்றனர், இறுதியில் என்ன ஆகிறது என்பதைப் பல்வேறு திருப்பங்களுடன் சொல்லவரும் படம் திருப்பங்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாரதா ராமநாதன். நா. முத்துக்குமார் பாடல்களை எழுத, வித்யாசாகர் இசையமைக்கிறார். ராஜலட்சுமி என்பவர் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர் இவரே!

அரவிந்த்

© TamilOnline.com