தெரியுமா?: FeTNA புதிய நிர்வாகிகள்
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) நிர்வாகக் குழுவுக்கு 2012-2014 ஆண்டுகளுக்குக் கீழ்க்கண்டவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்:

தலைவர்: முனைவர் தண்டபாணி குப்புசாமி, பனைநிலம் தமிழ்ச் சங்கம், சார்ல்ஸ்டன், தென்கரோலினா.
துணைத்தலைவர்: பீற்றர் யெரோனிமூஸ், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம், வாஷிங்டன் டி.சி.
செயலாளர்: மெளன. மணிவாசகம் (பதிவர் பழமைபேசி), தென்மத்திய தமிழ்ச் சங்கம், மெம்ஃபிஸ், டென்னசி.
துணைச்செயலாளர்: செந்தாமரை பிரபாகர், சார்லட் நகர தமிழ்ச் சங்கம், வடகரோலினா.
பொருளாளர்: தங்கமணி பாலுச்சாமி, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம், அட்லாண்டா, ஜார்ஜியா.

இயக்குநர்கள்:
கரு மலர்ச்செல்வன், பேரவை ஆயுட்கால உறுப்பினர், ஹூஸ்டன், டெக்சாஸ்.
யோபு தானியேல், மிசெளரி தமிழ்ச் சங்கம், செயிண்ட் லூயிசு, மிசெளரி.
பிரகல் திரு, கனடியத் தமிழர் பேரவை, கனடா.
சாரங்கபாணி குகபாலன், இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்கா

வட அமெரிக்காவில் உள்ள, ஐக்கிய அமெரிக்க மாகாணங்கள் மற்றும் கனடாவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாகக் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளக FeTNA இயங்கி வருகிறது. எதிர்வரும் ஜூலை 6, 7, 8 தேதிகளில் பால்டிமோர் நகரில் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடவிருக்கிறது. புதிய நிர்வாகிகள் இந்த விழாவில் பொறுப்பேற்பார்கள்.

பழமைபேசி,
டென்னசி

© TamilOnline.com